தேசமே! தேசமே! தேசமே! கர்த்தருடைய வார்த்தையைக் கேள்! (எரேமியா 22:29)

Thursday, 27 April 2017

தசமபாகம் சபைக்குறியதா?

தசமபாகம் சபைக்குறியதா?

 புதிய உடன்படிக்கை என்பது எந்த புத்தகங்களிருந்து கையாளப்படவேண்டியது? இயேசு கிறிஸ்து தசம்பாகம் கொடுக்க சொன்னதை ஆதார்மாக எடுத்துக்கொண்டால், இயேசு சுகமான ஒருவனை பலி செலுத்த சொன்னாரே அது ஏன்? அப்படியானால் அதை நாம் செய்யலாமா?  இன்றைக்கு ஏன் வசனத்தை ஆராய்ந்து விளக்காமல் ஒரு வசனத்தைக் கொண்டு முடிவு செய்துள்ளீர்கள்? இயேசு வாழ்ந்தது நியாயப்பிரமாணத்தின் கீழாக அதனால்தான் தசமபாகம் கொடுக்க சொன்னார். பலி செலுத்த சொன்னார், ஓய்வுநாளை கைக்கொண்டார், விருத்தசேத்னம் செய்துகொண்டார், இன்னும் பண்டிகை ஆசரித்தார், யூதர்களின் எல்லா வழிபாடுகளையும் நிறைவேற்றினார், சிலர் ஓய்வுநாளை கடைபிடிக்க வில்லை என சொல்லுவார்கள் இது தவறு அன்றைக்கு யூதர்கள் தவறான மனுஷீக கற்பனையினால் உருவாக்கியிருந்த ஓய்வுநாள் சடங்கைதானே மீறினாரெ ஒழிய சரியானப்டி அவர் ஓய்வுநாளை அனுசரித்தார், இவ்வளவும் ஏன் செய்தார் அவர் யூதராக இருந்ததாலும் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்பட்டவராக இருந்ததாலுமே. இப்படி வாழ்ந்த இயேசுவிடம் அன்றைக்கு யாராவது சென்று விருத்தசேதனம் செய்யவேண்டுமா என கேட்டிருந்தால் இயேசு என்ன சொல்லியிருப்பார்? செய்யவேண்டும் என சொல்லியிருப்பார், பலி செலுத்தவேண்டுமா என கேட்டால் செலுத்தவேண்டும் என்று சொல்லியிருப்பார், தசமபாகம் கொடுக்க வேண்டுமா என கேட்டிருந்தால் கொடுக்க வேண்டும் என சொல்லியிருப்பார், ஏனெனில் அவர் இருப்பது நியாயப்பிரமாண காலத்தில், அவர் மரித்து உயிர்த்தெழுந்தபின்தா நாம் நம்மை கட்டியிருந்த நியாயப்பிரமாணமாகிய சட்டதிட்டங்களிலிருந்து விடுதலையானோம் என அப்போஸ்தலர்கள் நமக்கு நிரூபங்களில் விளக்கினார்கள், ஆக நான் கடைபிடிக்க வேண்டிய எந்த உபதேசத்தையும் அப்போஸ்தல உபதேசத்தின் அடிப்படையில் சீர்தூக்கிப்பார்த்து மட்டுமே எடுக்கவேண்டும், அந்த அடிப்படையில் இயேசு சொன்ன தசமபாகம் என்பது சபைக்கு பொறுந்தாது, இதைக்குறித்து எந்த அப்போஸ்தலர்களும் சொல்லவில்லை, மீண்டும் நம்மை சட்டபிரகாரமான ஒரு வழிநடத்துதலுக்கு புதிய உடன்படிக்கை கொண்டு செல்லாது, நாம் ஆவியின்படி நடக்க கடைமைப்பட்டுள்ளோம், அதாவது ஆவியானவர் எவ்வவு கொடுக்கச்சொல்லு நம்மை ஏவுகிறாரோ அதை கொடுக்க கடமைப்பட்டுள்ளோம், இங்கு பத்தில் ஒரு பாகம் இல்லை பத்தில் இரண்டு பாகமாக இருந்தாலும் ஆவியானவர் சொன்னால் நான் மன உற்சாகமாய் அதை கொடுக்கவேண்டும், ஆக மீண்டும் பிரமாண போதனைக்கு சபை  விசுவாசிகளை கொண்டுபோகவேண்டாம், அதற்கு இயேசுவின் வார்த்தையை ஆதாரமாக எடுக்கமுடியாது

சாலமன் திருப்பூர்
Theos' Gospel Hall MInistries